தூத்துக்குடி:
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் விரதமிருக்கும் பக்தர்களுக்கு விடுதி வசதியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் வெள்ளியன்று துவங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 14.12.2017 அன்று திருச்செந்துார் கோயில் கிரிவலப்பாதை இடிந்து விழுந்தது. இதை சரி செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டிச 16 ஆம் தேதி வரை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது.

இதையடுத்து கோயில் நிர்வாகத்தில் உள்ள காட்டேஜில் 400 அறைகளில் 308 தங்க வசதியற்றவை, மராமத்து செய்ய வேண்டுமென அக்கமிட்டி சிபாரிசு செய்தது. அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.ஓராண்டாகியுள்ள நிலையில் அங்கு எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. தற்போது மீதமுள்ள 93 ரூம்களில் உபயதாரர்களுக்கு 20, நன்கொடையாளர்களுக்கு 15, விஐபிகளுக்கு 8, அனைத்து துறை அதிகாரிகளுக்கு 20, அது போக பக்தர்களுக்கு 30 அறைகள் மட்டுமே கிடைத்துள்ளது.

கந்தன் விடுதியில் 6 நாட்களுக்கு அரசு 3050 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. செந்துார் முருகன் குடிலுக்கு 16,050 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் விடுதிகளில் பேக்கேஜ் முறையில் 6 நாட்களுக்கு 20 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தற்காலிமாக 9 இடங்களில் குடில் அமைத்துள்ளனர். ஒரு குடிலில் 500 பேர் தங்கலாமென கோவில் நிர்வாகம் கூறுகிறது. ஆக மொத்தம் 4500 பேர் தான் தங்க முடியும். வழக்கமாக 6ஆயிரத்துக்கு மேற்பட்டடோர் கோயில் மற்றும் வளாக பகுதிகளில் விரதம் இருப்பார்கள். விடுதிகள் இல்லாத காரணத்தால் சுகாதார வசதி கேள்விக்குறியாகி விட்டது. இதனால் பக்தர்கள் சிரமமடைந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: