மும்பை:
பணமதிப்பு நீக்க விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தண்டிப்பதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா கூறியுள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷா கயாண்டே இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:
பணமதிப்பு நீக்க நடவடிக்கை முழுமையாக தோல்வியடைந்த ஒரு திட்டம். பணமதிப்பு நீக்கம் மூலம், கள்ள நோட்டுகளையும், பயங்கரவாதிகளுக்கான நிதியுதவியையும் தடுக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் ஒன்று கூட நடக்கவில்லை.

பணமதிப்பு நீக்கம் மூலம் வருமான வரி கட்டுவோர் விகிதம் அதிகரித்து இருப்பதாக கூறும் மத்திய நிதியமைச்சர், இந்த பணமதிப்பிழப்பீடு மூலம் எத்தனை பேர் வேலை இழந்தார்கள் என்பதை மட்டும் சொல்ல மறுக்கிறார்.

இந்நிலையில்தான், பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இவ்வாறு கயாண்டே கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: