சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகத்தின் மாமனாரும், கட்சி உறுப்பினர் செல்வகுமாரியின் தந்தையுமான தோழர் ஆசிர்வாதம் வெள்ளியன்று (நவ.9) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83.

அன்னாரது உடல் அஞ்சலிக்காக எண்.12, 6வது தெரு, ராஜீவ்காந்தி நகர், சிஆர்பிஎப் வளைவு, ஆவடி, சென்னை-65 என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், மனோகரன், கோ.மாதவன், பி.டில்லிபாபு, வீ.அமிர்தலிங்கம், ஆவடி பகுதிச் செயலாளர் ராஜன், விவசாய சங்கத் தலைவர்கள் முகமதுஅலி, சாமிநடராஜன், அருட்செல்வன் உள்ளிட்டு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

தோழர் ஆசிர்வாதத்தின் இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (நவ.10) காலை 11 மணியளவில் காமராஜ் நகர் சிஎஸ்ஐ இடுகாட்டில் நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: