புதுதில்லி:
உள்நாட்டு சிலிண்டர் விநியோகஸ்தர் களுக்கான கமிஷன் தொகை 14.2 கிலோ
எடை கொண்ட சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50.58 ஆகவும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கு ரூ.25.29 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2017 செப்டம்பரில் இவற்றின்  கமிஷன் தொகை முறையே ரூ.48.89 மற்றும் ரூ.24.20 ஆக இருந்தது. பெட்ரோலிய அமைச்சகம் இந்த அறி விப்பை வெளியிட்டவுடனேயே சமையல் எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலை யும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தலைநகர் தில்லியில் ரூ.505.34க்கு விற்பனை செய்யப்பட்ட மானிய சிலிண்டரின் விலை தற்போது ரூ.507.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் 9 நாட்களில் இரண்டாவது முறையாக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. நவம்பர் 1ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.2.94 உயர்த்தப்பட்டிருந்தது. சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதிலிருந்தே ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரையில் மொத்தமாக ரூ.16.21 உயர்த்தப் பட்டுள்ளது. சிலிண்டர் விலை சென்னை யில் ரூ.495.39 ஆகவும், மும்பையில் ரூ.505.05 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.510.70 ஆகவும் இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.