கோவை,
கோவையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பீளமேடு பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவர் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த காயத்ரி உடல்நிலை மோசமடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதே போல் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சூலூர் பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற 39 வயது பெண்மணியும் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காயச்சல் காரணமாக 9 பேர், டெங்கு காய்ச்சல் காரணமாக 4 பேர், வைரஸ் காய்ச்சல் காரணமாக 84 பேர் என மொத்தம் 97 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: