தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விஸ்வரூப தரிசன கட்டணமாக ரூ.2 ஆயிரம், அபிஷேக கட்டணம் ரூ.3 ஆயிரம், அபிஷேக விவிஐபி கட்டணமாக ரூ.7 ஆயிரத்து 500 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல் யாகசாலையில் நுழைவு கட்டணமாக ரூ.3 ஆயிரம் பக்தர்களிடம் பெறப்பட்டது. கடந்த ஆண்டு விஸ்வரூப தரிசனம் கட்டணமாக ரூ.100, அபிஷேக கட்டணம் ரூ.200, விவிஐபி அபிஷேக கட்டணமாக ரூ.800வசூலிக்கப்பட்டது. இதனை தவிர சிறப்பு விரைவு தரிசனம் கட்டணமாக ரூ.250, விரைவு தரிசன கட்டணம் ரூ.100 பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: