ரியாத்
ஏப்ரல் மாதத்துக்குப் பின் முதன்முறையாகக் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் எழுபது டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது.

ஈரானுடன் செய்துகொண்ட அணுஆற்றல் உடன்படிக்கையை அமெரிக்கா முறித்துக் கொண்ட தையடுத்துக் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. அக்டோபரில் ஒரு பீப்பாய் 81டாலர் என்கிற அளவுக்கு உயர்ந்தது.
இந்நிலையில், இந்தியா, தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும் அவற்றின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப் படாது என அமெரிக்கா அறி வித்துள்ளது.

அந்த அறிவிப்பின் ஊக்கத்தா லும் உலகச் சந்தையில் எண்ணெய் வழங்கல் அதிகரித்த தாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஒரு வாரத்தில் 4.5 விழுக்காடு விலை குறைந்
துள்ளது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 69 டாலர் 13 சென்ட்களாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.