புதுதில்லி:
மோடி அரசாங்கத்தின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவாக நாட்டின் பொரு ளாதாரத்திற்கும், மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள்இன்னமும் தொடர்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:மோடி அரசாங்கம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற மிக மோசமான நடவடிக்கை யை எடுத்து ஈராண்டுகள் கடந்துவிட்டன. எனினும், பிரதமர் மோடியால் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் மக்களின் மீதும் திணிக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட பேரிடரி லிருந்தும், மிக மோசமான விளைவுகளிலிருந்தும் இன்னமும் நாடு மீளவில்லை.

பிரதமர் மோடியால் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது, இதன்மூலம் பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் வெளிக்கொணரப்படும் என்றும், லஞ்சத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் முற்றிலும் பொய் என்று மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. மாறாக, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளில் 99.4 சதவீதம் மீண்டும் அரசின் கணக்கிற்கு வந்துவிட்டது. இதி லிருந்து, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்மூலமாக, கருப்புப்பணமாக இருந்த ரூபாய் நோட்டுகளும் வெள்ளையாக மாறி, அவற்றை வைத்திருந்த லஞ்சப் பேர்வழிகளுக்குப் பெரிதும் உதவி இருப்பதுதான் உண்மையில் நடந்துள்ளது.

அதேசமயத்தில், இந்த அறிவிப்பின் விளைவாக, தினசரி ரொக்கப் பரிவர்த்தனைகளை முழுதும் நம்பியிருந்த கோடானு கோடி மக்கள் வாழ்க்கை சூறையாடப்பட்டிருக்கிறது. முறை
சாராத் தொழிலில் ஈடுபட்டிருந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோன்று, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவைச் சேர்ந்தவர்களும் மிகப் பெரிய அளவில் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பயங்கரவாத நடவடிக்கைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற மோடியின் கூற்றும் படு தோல்வி அடைந்திருக்கிறது. வெளிவந்திருக்கிற அரசின் தரவுகளின்படி பயங்கரவாத நடவடிக்கைகள் அதன்பின்னர் இரட்டிப்பாகி இருக்கின்றன.

பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டதை நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் எவ்வித கூச்சநாச்சமுமின்றி வக்காலத்து வாங்கியதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் குளறுபடி ஏற்பட்டிருப்பதற்கு, அவரும் மோடிக்கு இணையாகப் பொறுப்பாவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் செய்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, நாடு முழுதும் நடந்துவரும் பிரச்சாரத்தின்போது, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் காரணமாக மேலே கூறியவாறு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களையும் கட்சி அணியினர் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.