141 உயிர்களின் வலி …..

141 தெரிந்த கணக்கு , தெரியாதது எவ்வளவோ . கணக்குத் தெரிந்து141 பேர் வங்கிக் கியூவில் நின்று 500 , 1000 ரூபாய் நோட்டை மாற்ற உயிரிழ்ந்தனர் . பிரதமர் மோடி இதுவரை இந்த இந்தியன்களுக்க் , இந்துக்களுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை . அப்படியானால் இவர்கள் கறுப்புப் பண முதலைகளோ ! சங்கிகள் அப்படித்தான் சொல்லுவார்களோ என்னவோ !

நவம்பர் 8 இதை எல்லாம் நினைவு படுத்துகிறதே ! நாம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவோம் !!!!

இறந்தவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கறுப்புப்பணம் அல்லது கள்ளப்பணம் எவ்வளவு இதுவரை சொல்லவில்லையே அவர்கள் முந்தியில் முடிஞ்சிருந்த ஆயிரம் ,இரண்டாயிரம் தவிர வேறேதும் இல்லை . அப்படியாயின் உழைத்து சம்பாதித்த தன் காசை செல்லாக்காசென மோடி அறிவித்ததால் அதை நல்ல காசாக்க கியூவில் நின்று செத்துத் தொலைந்த அப்பாவிகள் அவர்கள் .அந்த இந்துக்களுக்காக எந்த இந்து அமைப்பும் பொங்கவில்லயே ! இந்து மேலே தூசி விழுந்தாலும் போர் போர் என கொக்கரிக்கும் தமிழிசைகள் பார்வையில் இவர்களெல்லாம் தேசவிரோதியா ?

அது போகட்டும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்த செல்லா நோட்டு 95 % ஆம் . பூட்டான் நேபாளில் சராசரி 3% அதாவது அங்கு மொத்தம் 6% இருக்குதாம் .இன்னும் ஜனங்க ஆற்றுல மிதக்கவிடுற ,பூமியில புதைச்சிருக்கிற , பெட்டியில் தூங்குகிற செல்லா நோட்டு 8 % முதல் 10 % வரை இருக்குமாம் .கணக்கு மொத்தம் 109% ,111 % ன்னு கணக்கு எகிறுது .ஒது ஒரு வேளை வேதக்கணக்கோ !!!

இந்த செல்லா நோட்டுதான் மிகப்பெரிய இமலாய ஊழலில் ஊற்றுக்கண் . எந்த கறுப்பண முதலையும் , பணக்காரனும் கியூவில் நிற்கவே இல்லை ,கட்டுக்கட்டா புது நோட்டு தானே நடந்து அவங்க வீட்டுக்கு தானே போயிடிச்சி . இதுக்கு 10 % முதல் 30 % சதம் வரை கமிஷன்னு கொள்ளையடித்த ராசாக்கள் ,நாறவாய்கள் யாரென நாடறியும் .

இரண்டு வருடங்களுக்கு முன் செல்லா நோட்டு அறிவிக்கப்பட்ட சில நாள் கழித்து ஓசூர் போயிருந்தேன் .அங்கு ஒருவர் சொன்னார் . “ நான் ரிட்டயர்டாக இன்னும் ஒரு வருஷம் இருக்கு . ஆனால் பொண்ணு கல்யாணம் தைமாசம் வச்சிருக்கேன் .தெரிந்த மார்வாடிட்ட 5 லட்சம் கடன் கேட்டிருந்தேன் . அவர் திடீர்னு நவம்பர் 5 ஆம் தேதி கூப்பிட்டு மொத்தப் பணத்தையும் தந்தார் ,வட்டி ஜனவரியிலிருந்து போதுமென்றார் .இப்போது அந்த நோட்டு செல்லாது . நான் வட்டியும் கட்ட வேண்டும் .அசலும் திருப்ப வேண்டும் . ஏமாந்திட்டேன் எனப் புலம்பினார் .”

அவர் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இது போல் ஏமாந்தோர் ஆயிரம் ஆயிரம் .மார்வாடிகளுக்கு , குஜராத்திகளுக்கு , சங்கிகளுக்கு மட்டும் ரகசியம் தெரிந்தது எப்படியோ ? அதுதான் மோடிவித்தை என்பதோ ?

இதை நான் அப்போதே பதிவிட்டேன் .சினிமாத் துறை சார்ந்த ஒருவர் என்னை அழைத்து சொன்னார் பல வருஷமாய் கொடுக்காத வட்டி ,கடன் எல்லாம் 400 கோடியை நவம்பர் ஆறு அன்று அவசர அவசரமாக மொத்தமாகத் தந்து ஏமாற்றிய மருமகனை சொன்னார் . மாமனார் குறிப்பிட்ட இடத்தில் சொல்லி 30 % கமிஷனில் மாற்றிக்கச் சொன்னாராம் .இவங்க செல்லா நோட்டு தேசபக்த சேவைன்னு மோடியப் புகழ்ந்தவங்க செஞ்சது .

இந்த செல்லா நோட்டும் ஜிஎஸ்டியும் இந்தியப் பொருளாதாரத்தை குறிப்பாக சிறு தொழிலை ,சிறு வணிகத்தை , ரியல் எஸ்டேட்டை , அடித்து நொறுக்கி அவசரப் பிரிவில் கோமாவில் கிடத்திவிட்டது .

நவம்பர் 8 உலக மோசடி நாள் எனில் பிழையோ ?
#DeMoDisaster

Su Po Agathiyalingam

Leave a Reply

You must be logged in to post a comment.