சென்னை:
தீபாவளிப் பண்டிகை முடிந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னை வந்து சேர்ந்தனர். முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் ஏராளமானோர் வந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

பண்டிகைக்காக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 7 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். நெல்லை ரயில் நிலையத்தில் 100 நபர்கள் அமரக்கூடிய முன்பதிவில்லாத பெட்டியில் 400-க்கும் அதிகமானோர் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் பொதுப்பெட்டியில் இணைக்கப்பட்டதால் அவர்கள் கடும்அவதிக்கு ஆளாகினர். செங்கோட்டை, தென்காசி ரயில்நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பண்டிகை காலங்களில் நெல்லையில் இருந்து சென்னை வரும் ரயில்களில் கூடுதலான எண்ணிக்கையில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.