”செல்லாப் பண நடவடிக்கையால் என் பிசினஸ் ‘கொஞ்சம்’ அடிவாங்கியது உண்மைதான். ஆனால் இப்போது சரியாகிவிட்டது. யூ நோ, இப்போவெல்லாம் நான் கார்டு மட்டும்தான் யூஸ் பண்ணுகிறேன். சோ குட் ஆஃப்டர் டிமோனிடைசேஷன்.
நெ ட் பாங்கிங் தனியார் வங்கியில் டிரை பண்ணுங்க. 40000 வரை எடுக்கலாம்
நான் பே டி எம் வைத்துதான் டீ சாப்பிடுகிறேன். அந்ந டீ கூட நவம்பர் 8 க்கு பிறகு டேஸ்ட் நல்லா இருக்கு. டிஜிடல் டீதான் இந்தியாவின் எதிர்காலம்.”

முறைசாராத் தொழிலில் வேலையிழந்து, விவசாய விளைபொருள் வீழ்ச்சியால் வாழ்விழந்து, ஜி எஸ் டியால் தொழில் நசிந்து வாடும் கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்த மிடில் கிளாஸ் மைனர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை.
தம் மூக்கின் நுனிக்கு மேல் பார்க்கமுடியாத உணர்ச்சியற்ற, படித்த மூடர்களின் நாட்டில் வாழ்வதுதான் பெரும் வேதனை. குறுகிய கால வலியாம், நீண்டகால பலனாம். குறுகிய கால வலியைக் கூடத் தாங்காமல் செத்துவிடும் ஜீவன்கள்தான் அதிகம் இங்கு. நீண்ட காலப் பயனை யார் அடைகிறார்கள் என்பதை நீண்டகாலமாகப் பார்த்துதான் வருகிறோம்.
It is not even trickling down, Stupid!

Vijayasankar Ramachandran

Leave a Reply

You must be logged in to post a comment.