மதுரை:
நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் சர்கார். சன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் ,அதிமுக அரசுக்கு எதிராகவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராகவும் சில வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை நீக்கக்கோரியும் வியாழனன்று அதிமுகவினர் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பு ரகளையில் ஈடுபட்டனர்.

சென்னை, மதுரை, கோவை, திருவள்ளூர் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். கோவை உட்பட சில இடங்களில் பேனர்களை அடித்து நொறுக்கியும், கிழித்தும் பதற்றமான ஏற்படுத்தினர். சென்னையில் காவல்துறை ஆணையர் உத்தரவின்படி சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பு காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.