மும்பை:
தீபாவளி பண்டிகையன்று நாட்டிலேயே அதிக அளவிலான ஒலி மாசு ஏற்படுத்திய பகுதிகளில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது.

தீபாவளி பண்டிகைதினத்தன்று காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதாகக் கூறி, குறிப்பிட்ட 2 மணி நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருந்தது.இந்நிலையில் சு சாரா தன்னார்வ அமைப்பான ‘ஆவாஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட 55 டெசிபிள் அளவை விட இரு மடங்கு அதிகரித்து 114.1 அளவிலான டெசிபிள் ஒலி பதிவாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஒலி மாசு குறைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் சில இடங்களில் ஆய்வுசெய்த பட்டாசுகள் பசுமை குறியீடு அளவு அனுமதியை மீறி தயாரிக்கப்பட்டதாகவும் இருந்தது. அதன் அமிலங்களும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக இடம் பெற்றிருந்தாக தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.