இராமேஸ்வரம்: 
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இராமேஸ்வரம்,
பாம்பன், மண்டபம் மற்றும் தனுஸ்கோடி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படு
கிறது. மேலும் இரண்டாவது நாளாக மழைநீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிப்படைந்துள்ளது. கடல் சீற்றம் காரணமாக இரண்டாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் துறை முகங்களில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதி காரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.