விருதுநகர்,

விருதுநகரில் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற விவகாரத்தில் மேலும் 6 பேர் கைது, 36 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் நேற்று இரவு 3400 ரூபாய் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற விருதுநகர் செவல்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா, கோபிநாத் ஆகிய இருவரை கைது செய்து விசாரனை நடத்தியதில் கும்பலாக இணைந்து மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்களை அச்சடித்து புலக்கத்தில் விடுவதற்காக கள்ளநோட்டுக்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து  துவரிமான் பகுதியில் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட இடத்தில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் மதுரை மாவட்டம் கொக்கலாஞ்சேரியை சேர்ந்த திருவாசகம், முருகன், செவல்பட்டி முருகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 36 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள், கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய 2 பிரிண்டர்கள் 4 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.  மேலும் கள்ள நோட்டு அச்சடிக்கும் வேறு நபர்கள் உள்ளார்களா என்ற கோணத்தில் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளில் 23 லட்சத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.