கோவை: நவம்பர் புரட்சி தினத்தையொட்டி புதனன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சோசலிச அரசின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டது. சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட அக்டோபர் புரட்சி தினத்தை உலகம்முழுவதும் உள்ள இடதுசாரி அமைப்புகள் எழுச்சியோடு கொண்டாடி வருகிறது. இதன் ஒருபகுதியாக புதனன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட்கட்சியின் சார்பில் நவம்பர் புரட்சிதின கொடியேற்று விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. கோவை காந்திபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

நவம்பர் புரட்சிதின செங்கொடியை கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.வி.தாமோதரன் ஏற்றிவைத்தார். நவம்பர் புரட்சியின் தியாகங்கள் குறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா, கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.ஜாகீர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று நவம்பர் புரட்சி தின முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செங்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நவம்பர் புரட்சி தினத்தின் நினைவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டம், கடம்பூர் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் எம். சடையலிங்கம் தலைமை வகித்தார். மலை வட்டார செயலாளர் சி. துரைசாமி கொடியேற்றி வைத்தார். தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ராஜ்குமார், தாயிலம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர். அந்தியூர் கிருஷ்ணாபுரத்தில் கிளைச்செயலாளர் எம்.முருகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் செங்கொடியேற்றி பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் நடைபெற்ற விழாவில் தாலுகா செயலாளர் பி.கே.கெம்பராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.