திருப்பூர் :திருப்பூரில் திபாவளிக்கு துணிகளை தைத்து தரமுடியாததால் மனமுடைந்த பெண் டைலர் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பாப்பண்ணா நகரில் மகளிர் தையல் நிலையம் நடத்தி வருபவர் பத்மினி (41). திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த இவர் தாய் அம்பிகா, மகள் தமிழரசி மற்றும் மகன் லிபின்சாகர் உடன் வசித்து வருகிறார். இவரிடம் திபாவளி பண்டிகைக்கு துணிகள் தைத்து தர ஏராளமானோர் துணி கொடுத்துள்ளனர். எனினும் இறுதியாக சில துணிகளை தைத்து தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது நற்பெயர் கெட்டு விடும் என மனமுடைந்து சாணிபவுடரை குடித்து பத்மினி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் பத்மினியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.