கோவில்பட்டி : சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், சர்கார் படத்தில் ஜெயலலிதாவின் இயற் பெயர் தவறாக பயன்படுத்தப் பட்டுள்ளது குறித்தும், இலவச திட்டங்களுக்கு எதிரான வசனங் கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தங்களுக்கும் இது தொடர்பாக புகார்கள் வந்துள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். மேலும் வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு இது நல்லது அல்ல என்றும் கடம்பூர் ராஜூ எச்சரித்தார்.

அரசை விமர்சிக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் சர்கார் திரைப்படம் எடுக்கப் பட்டுள்ளதாகவும், அதைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி அருகே அக்குமனஹள்ளியில் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு இலவசங்களை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: