சேலம்: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாய்க்கன்பட்டி வெள்ளாளர் தெருவில் வசித்து வருபவர் ஜெகநாதன். இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைத்து கறிக்கோழிகளை வளர்த்து வருகிறார். தற்பொழுது பண்டிகை காலம் என்பதால் தான் வளர்த்து வந்த கறிக்கோழிகளை வியாபாரம் செய்துவிட்டார். இந்நிலையில், செவ்வாயன்று அவருடைய கோழிப்பண்ணையில் திடீரென தீ பற்றியுள்ளது. இதை கண்ட ஜெகநாதன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். மேலும் கோழிப்பண்ணை அருகில் செல்போன் கோபுரம் உள்ள நிலையில் பெரும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதால் அருகிலிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்துசேதமடைந்தன. இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: