காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டெங்கு கொசு உற்பத்தி யாகும் வகையில் சுகாதாரமின்றி இருந்த பழைய ரயில் நிலைய நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திடீரென ரயில் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி காணப் பட்டது. இதனை அடுத்து பழைய ரயில் நிலைய நிர்வாகத்திற்கு, ஆட்சியர் பொன்னையா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். குடியிருப்புக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் இதேபோல், திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் நிர்மல் குமார், நகரின் வி.எஸ்.டி தெரு, காரைக்காட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தேங்கியிருந்த நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகியிருந்தன. இதனால் அந்த குடியிருப்புக்கு ஆட்சியர் நிர்மல் குமார் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.