திருச்சிராப்பள்ளி’:
தத்தெடுப்பு என்ற பெயரில் குழந்தைகள் விற்கப்படுகிறார்கள் என்றும், இதைத் தடுக்க கண்காணிப்புக்குழு அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தேசிய குழந்தைகள் உரிமை பாது காப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆனந்த் கூறினார்.
இதுதொடர்பாக அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்கம், பீகார் மாநி லங்களின் எல்லையில் ஆராரியா என்ற இடத்தில் இயங்கி வந்த குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய சோதனையில் ஒரு குழந்தை உறுப்பு தானத்திற்காக ஸ்பெயின் நாட்டிற்கு ரூ. 3 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு – இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 4 லட்சம் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெளிநாட்டு தம்பதிக்கு தத்து கொடுக்கிறோம் என்ற பெயரில் நூதன முறையில் குழந்தைகளின் உடல் உறுப்புகளை தானம் செய் வதற்காக கடத்தப்படும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுக்க மத்திய அரசின் உத்தரவுப்படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது, காப்பகங்களில் அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கிறார்களா என் பதை கண்காணிப்பது ஆகியவை தான் இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம் ஆகும். தத்தெடுப்பு என்ற பெயரில் பணத்திற்காக நூதன முறை யில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் இன்னும் ஒரு மாதத்தில் அமைக்கப் பட இருக்கிறது.இந்த குழுவில் புகார் செய்தால் 24 மணி நேரத்தில் பதில் வரும். 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட காப்பகத் துக்கு கண்காணிப்பு குழுவினர் நேரடியாக சென்று விசாரணை நடத்துவர்.கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் இருந்து எத்தனை நாடுகளுக்கு
எத்தனை குழந்தைகள் தத்தெடுப்பு என்ற பெயரில் விற்கப்பட்டிருக் கிறார்கள் என்ற பட்டியலை தயாரித்து சம்பந்தப்பட்ட நாடுகளில் விசாரணை நடத்த இருக்கிறோம்.தமிழகத்தில் 1284 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன. அனைத்து காப்பகங்களும் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளனவா; குழந்தைகள் நல்ல மனநிலையில் இருக்கிறார்களா என சோதனை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 24 குழந்தைகள் காப்பகங் களும் எந்தவித புகார்களும் இன்றி சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.