திருப்பூர்: அவிநாசியில் வியாழனன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மாநாட்டு ஆயத்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்கிறார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து திருச்சியில் டிசம்பர் 10ஆம் தேதி தேசம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு குறித்து மேற்கு மண்டல சிறப்பு ஆயத்தக் கூட்டம் நவம்பர் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு அவிநாசி ஸ்ரீ சரசுவதி மஹாலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்கிறார். இந்நிகழ்வில்11 மாவட்டச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி வரவேற்கிறார். இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனைவரும் பங்கேற்குமாறு நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளர் பழ.சண்முகம், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: