வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல்ய கடன் ஏய்ப்பு செய்தவர்களின் விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரிசர்வ் வங்கி வெளியிடாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
மத்திய தகவல் ஆணையம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அனுப்பியுள்ள அந்த நோட்டீசில், 50 கோடி ரூபாய் மற்றும் அதற்கு அதிகமாக வங்கி கடன் பெற்று,  வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி இதுவரை கடன் ஏய்ப்பு செய்தவர்களின் விவரங்களை வெளியிடவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறியதால், உர்ஜித் படேலுக்கு வரும் 16 ஆம் தேதிக்கு முன் ஏன் அதிகபட்சம் அபராதம் விதிக்க கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கொள்கைப்படி, ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னரின் பேச்சுக்கும், ரிசர்வ் வங்கி இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் தகவலுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எழுதிய கடிதங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம், மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கியை மத்திய தகவல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: