திருநெல்வேலி,

மின்வாரியத்தை பிரிப்பதை கைவிட்டு மின்வாரியத்தை பொதுத்துறையாக நீடிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள்திட்ட மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.

நெல்லையில் சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள் திட்ட 21ஆவது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் அந் தோணி கிளமென்ட் தலைமை தாங்கினார். துணை தலைவர் மாடசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணை தலைவர் ஐயப்பன் வரவேற்று பேசினார். மின் ஊழியர் மத்தியமைப்பின் நெல்லை மண்டல செயலாளர் எம்.பீர்முகம்மது ஷா துவக்கி வைத்து பேசினார். சங்க செயலாளர் கணேசன் செயலாளர் அறிக்கைகளை சமர்ப்பித்து பேசினார். பொருளாளர் அசோக் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்து பேசினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பின் முன்னாள் செயலாளர் ஏ.கிருஷ்ணன், மாநில செயலாளர் எஸ்.வண்ணமுத்து , திட்ட பொருளாளர் சங்கர் ,ஓய்வு பெற்ற நலஅமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.ராஜாமணி, மின்ஊழியர் மத்தியமைப்பின் முன்னாள் தலைவர் எஸ்.பூலுடையார், கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் டி.கந்தசாமி ஆகியோர் பேரவை கூட்டத்தை வாழ்த்திப் பேசினர்.

பேரவை கூட்டத்தில் மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங் களை நிரப்பிட வேண்டும், மின்வாரியத்தை தனியாருக்கு விற்பதை தடுத்திட வேண்டும்,மின்சார சட்ட திருத்த மசோதா 2014 ஐ திரும்ப பெற வேண்டும்,துணை மின் நிலையங்களை அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்திட வேண்டும், மின்வாரியத்தை பிரித்து தனியாருக்குவழங்குவதை கைவிட்டு மின்வாரியத்தை பொதுத்துறையாக நீடிக்கவேண்டும், புதிய பென்சன் திட் டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திடுக, ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திடுக உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதலைவராக எம்.கே.மாடசாமி, செயலாளராக பெ.கணேசன், பொருளாளராக கே.ஐயப்பன் மற்றும் 5 துணை தலைவர்கள்,5 துணை செயலாளர்கள் உட்பட 19 பேர் கொண்டகமிட்டி தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு துணை தலைவர் வை.பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.