திருநெல்வேலி,

தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு தீபாவளியையொட்டி ரூ.5000 முன்பணம் வழங்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தில் இணைத்து பலன்களை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு எம்.ஆறுமுகம் வரவேற்றார். சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் தெ.ஆறுமுகம், முத்து முகம்மது, ஓய்வுபெற்ற வருவாய்த்துறை சங்க நிர்வாகிமுருகானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். எஸ்.என்.முருகன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.