திருச்சிராப்பள்ளி,

திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது 3 பேரிடம் கத்தை, கத்தையாக வெளிநாட்டு பணம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து ஒரு விமானம் ஞாயிறன்று அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் சோதனைக்கு பின் வெளியே சென்ற நிலையில் இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், அவர்கள் வைத்திருந்த பைகளில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட கத்தை, கத்தையாக இருந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருந்த ஒரு பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட 3 பேரிடமும் மொத்தம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: