திருநெல்வேலி,

செங்கோட்டையை அடுத்துள்ள வடகரையில் சொத்துவரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடந்தது.

செங்கோட்டையை அடுத்துள்ள வடகரை பேரூராட்சி அலுவலகம் முன்புவைத்து வடகரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி உயா்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் அப்துல்ரஹ்மான் தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர் ஹபீப் முன்னிலை வகித்தார். தாலுகா செயலாளர் வேலுமயில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பால்ராஜ், வன்னியபெருமாள், தாலுகாகுழு உறுப்பினர்கள் தம்பிதுரை, ஆயிஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர்கள் சங்க நெடுவயல் கிளைச் செயலாளர் பேச்சிமுத்து மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்கள் நிர்வாகிகள் உள்படபலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.