கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும்  பரபரப்ரபை  ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். இன்று காலை 11.10 மணியளவில் மத்திய கொல்கத்தாவில் உள்ள நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் எட்டு மாடிக் கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்தது. பார்க் ஓட்டலை ஒட்டிய இந்த கட்டிடத்தில் ஏராளமான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஏபிஜே சுரேந்திரா குழுமத்துக்குச் சொந்தமான ஏபிஜே ஹவுசிங் என்ற நிறுவனம் 5ம் தளத்தில் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தில் பொறுத்தப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டியில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து கொளுந்துவிட்டு எரியும் தீயைக் கட்டுப்படுத்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பல மணி நேரங்களாகப் போராடி வருகின்றனர். தீ விபத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அலுவலகத்தில் தீப்பிடித்ததை அடுத்து நிறுவனம் அபாய ஒலியை எழுப்பி அனைவரையும் வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கப்பட்டது. மேலும் தீவிபத்தை தொடர்ந்து காவல் துறையினர், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே பல மணி நேரம் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.