கூடலூர்

இருசக்கர வாகனத்தில் வந்தவரை காப்பாற்ற பேருந்தை இடதுபுறம் ஓட்டியதில் பத்தடி பள்ளத்தில் பேருந்து கவிழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை மற்றும் பேருந்தில் பயணம் செய்த நாற்பது பேர் படுகாயம் அடைந்தனர்.

தாளூரில் இருந்து கோவைக்கு வந்த அரசு பேருந்தை கூடலூரைச் சேர்ந்த ஜெகநாதன்(35) என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பாண்டியாறு பகுதியில் வரும்போது எதிரே கூடலூரில் இருந்து சந்திரமோகன்(50) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியுள்ளது. இதனையடுத்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ,பேருந்தை இடது புறம் திருப்பிய போது 10 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழுந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 70 பயணிகளில் 40 பேர் படுகாயமடைந்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்த சந்திரமோகனை மீட்ட பொதுமக்கள் காயம் அதிகமாக இருந்த காரணத்தால் பெருந்தல் மன்னா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 40 பேருக்கு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அதிக காயமடைந்த எட்டு பேர் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனத்தில் வந்தவரை காப்பாற்ற முயன்றதால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: