தேனி,
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் மற்றும் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பால் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளும் இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளன. இந்நிலையில் தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வன் ஆண்டிபட்டியில் கூறுகையில், 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி உள்பட 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அதிமுக ஒரு ஓட்டுக்கு ரூ.10ஆயிரம் தர இருப்பதாக தகவல் வந்துள்ளது. தொகுதிக்கு மொத்தம் 2 லட்சம் ஓட்டுகள். அவர்கள் ஊழல் செய்த பணத்தில் தொகுதிக்கு ரூ.200 கோடி வீதம் ரூ.4 ஆயிரம் கோடி, கூடுதல் செலவுக்கு ரூ.1000 கோடி என மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: