சிம்லா, நவ. 3-

இந்திய மாணவர் சங்கத்தின் 16ஆவது  அகில இந்திய மாநாடு, சிம்லாவில் நவம்பர் 1 அன்று தொடங்கி இரு நாட்கள் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக வி.பி சானு, பொதுச் செயலாளராக
மயூக் பிஸ்வாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 93 பேர் கொண்ட மத்திய குழுவும்   தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து, வி. மாரியப்பன் மத்திய செயற்குழுவிற்கும், ஏ.டி. கண்ணன், க. நிருபன் சக்ரவர்த்தி, இரா. ஜான்சிராணி, ஜெயபிரகாஷ் (பாண்டிச்சேரி), சத்யாராம், உமன்சபு (ஐஐடி) ஆகியோர் மத்தியக்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநாட்டில் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயலாளர் வி.முரளிதரன், ஊனமுற்றோர் பிரச்சனைகளை விளக்கியும், இதில் எந்தவிதத்தில் இந்திய மாணவர் சங்கம் தலையிடலாம் என்பது குறித்தும் உரையாற்றினார்.  வி. முரளிதரன் முன்னாள் இந்திய மாணவர் சங்கத்தின் குஜராத் மாநில செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: