மதுரை:
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்களில் உள்ள அதிகாரிகளுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் அளிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல்நிலையத்தில் கணக்கில் வராத 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர். மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தேனியில் உள்ள பேரூராட்சிகளின் உதவிஇயக்குநர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ரூ.80,200ஐ கைப்பற்றினர். அலுவலகத்தில் பணிபுரிகின்ற அனைவரின் செல்போன்கள், கைப்பைகள் ஆகியவையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: