நாமக்கல்: உயர்த்தப்பட்ட வரிகளை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர ஒன்றிய குழுக்களின் சார்பில் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரகுழு உறுப்பினர் எம்.சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில். வீட்டு வரி,சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி எனஉயர்த்தப்பட்ட வரிகளை திரும்பப் பெறவேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடன
டியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன. முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராயணன், ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம், நகர செயலாளர் ஐ.ராயப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், நகரக் குழு உறுப்பினர் நடேசன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: