தேனி:
2018 ஆம் ஆண்டு போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டிக்கான பரிசு பெறும் கதைகளைத் தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பணி அக்டோபர் 31 அன்று நடைபெற்றது.
நடுவர் குழுவினர் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் உதயசங்கரை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது.

மொத்தம் போட்டிக்கு வந்த கதைகள் 337. முதல் பரிசுபெற்ற சிறுகதை
பாம்பும், ஏணியும் – கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா). இரண்டாம் பரிசு குறத்திகள் ஆடும் மூன்றாம் ஜாமம் – சிவக்குமார் முத்தய்யா (சென்னை). மூன்றாம் பரிசு சபீரின் உம்மா கதை சொல்வதில்லை – இடலாக்குடி அசன் (நாகர்கோவில்). ஊக்கப்பரிசு பெற்ற கதை திருகு – மீரா செல்வக்குமார் (திருச்சி).அவனே சொல்லட்டும் – சக.முத்துக்கண்ணன் (கூடலூர்).
பிரசுரத் தேர்வு: அணையாதது – பொன்னீலன், ஒரு துளி மேகம் – பிரேம பிரபா, கட்டச்சி – பானுமதி பாஸ்கோ. காதலுக்கு ஒரு போர் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், இருள் – அ.கரீம்,பேச்சு பேச்சு – கலை இலக்கியா ஆகிய பிரசுரத் தேர்வு பெற்ற சிறுகதைகளுக்கும், போட்டியில் பங்கு பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். பரிசளிப்பு விழா தேதி மற்றும் நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்பட்டு, தகவல் தெரிவிக்கப்படும் என்று சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளர் அ.உமர் பாரூக், தமுஎகச தேனி மாவட்டச் செயலாளர் அய்.தமிழ் மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.