புதுதில்லி,
பெரு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது என்று சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டி உள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சட்டப்பிரிவு 7ஐ பயன்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மோடி அரசு தலையிடுகிறது. பெருநிறுவனங்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறது. ஏற்கனவே மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.3 லட்சம் கோடிக்கு மேலான வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. இப்போது அவர்களுக்கு கூடுதல் கடனை கொடுக்க நெருக்கடி கொடுக்கிறது. இது பொதுமக்களின் நலனுக்கு மாறானது. இது பொதுமக்களின் பணத்தை திருப்பி அளிக்காத பணக்கார நண்பர்களுக்குதான் பயனளிக்கும் என்று டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: