இராமநாதபுரம்:
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கைகடற்படையினர் தாக்கி விரட்டி யடித்தாக புகார் எழுந்துள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், 200 மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர்.
அவர்களில் சில மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்கிய தோடு, துப்பாக்கி முனையில் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.