ஈரோடு: கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2017-18 ஆம் ஆண்டு டன் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.200 தருவதாக அறிவித்த தொகையை உடனடியாக தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும். 2013-14 ஆம் ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டு எஸ்ஏபி பாக்கி தொகையை சக்தி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய ரூ.105.6 கோடி உட்பட ரூ.1,220
கோடியை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்து 9.5 சதவிகிதம் சர்க்கரை சத்துக்கு 2018-19 ஆம் ஆண்டு அரவை பருவதற்கு ரூ.4 ஆயிரமாக விலை அறிவிக்க வேண்டும். சர்க்கரை எடை போடும் எடை மேடையில் கரும்பையும் எடை போட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சத்தியமங்கலம் சக்தி பண்ணாரி ஆப்பக்கூடல் கிளை சார்பில் ஆலையின் கேட் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் டி.பி.கோபிநாத் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.அய்யாவு, மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, பண்ணாரி அலை கமிட்டி தலைவர் எஸ்.முத்துசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். சக்தி சர்க்கரை ஆலை கமிட்டி செயலாளர் வி.பி.கார்த்திகேயன், பொருளாளர் பி.வெங்கிடுசாமி, துணை தலைவர்கள் கே.இ.விவேகானந்தன், சென்னியப்பன் கே.ராமசாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.