சென்னை,
இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை சென்னை ஐஐடி பல்கலைகழகத்தின்ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை
சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி மாணவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இது குறித்து முதன்மை ஆராய்ச்சியாளர் கூறியதாவது ’இந்த மைக்ரோ பிராசசரின் டிசைனானது அனைத்து டிவைஸ்களிலும் பயன்படுத்தும் விதமாக கண்டறியப்படுள்ளது. புளூஸ்பெக் என்றஉயர்ரக சிந்தசிஸ் மொழியால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதை மின்சார சாதனம் முதல் கணினிவரை பயன்படுத்த முடியும்.இந்த மைக்ரோ பிராசசரைபயன்படுத்தும்போது சைபர் தாக்குதல் முற்றிலுமாக கட்டுபடுத்த முடியும். இந்த மைக்ரோபிராசசரை பயன்படுத்தஇந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

மேலும் இதன் அடுத்தகட்ட முயற்சியாக இன்னும் மேம்பட்ட மைக்ரோ பிராசசரை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது என்றும் அந்தமைக்ரோ பிராசசருக்கு பராசக்தி என்று பெயர் சூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: