உதகை:
மே உழைப்பாளர் தினத்தில் உண்டியலை திறப்பது. ஆயிரம் உண்டியலை கொண்டு ஆயிரம் தீக்கதிர் சந்தாவை சேர்ப்பது என்கிற புதிய முயற்சியை மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு மேற்கொண்டுள்ளது. அதற்கான உண்டியல் விநியோகிக்கும் பணி ஊட்டியில் வியாழனன்று நடைபெற்றது.

உழைப்பாளி மக்களின் உரிமைக்குரலாய், ஊடக உலகின் போராளியாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் நாளிதழ் செயல்பட்டு வருகிறது. இந்நாளிதழை தமிழகம் முழுவதும் உள்ள உழைப்பாளி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்கிற முனைப்போடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீவிரமான செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டக்குழுக்கள் தீக்கதிர் நாளிதழின் சந்தாவை அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டமிடல்களோடு களப்பணியாற்றி வருகின்றன.
இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டக்குழு புதுவிதமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டக்குழுவிற்கு 500 தீக்கதிர் சந்தா இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் தற்போதுவரை 405 சந்தா சேர்க்கப்பட்டுள்ளன. இதில் புதிதாக 164 சந்தாக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 11 ஆம்தேதி கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தில் இலக்கை பூர்த்தி செய்து ஒப்படைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக நமது பத்திரிகை தீக்கதிர். இதனை கட்டாயம் வாங்க வேண்டும். ஆனால் மொத்தமாக பணம் செலுத்த வாய்ப்பில்லையே என்கிற தோழர்களின் ஏக்கத்தை உடைத்து அனைவரையும் தீக்கதிர் நாளிதழ் சந்தாவை வாங்கவைப்பது என்கிற விதமான திட்டமிடலோடு களமிறங்கியுள்ளது. இதற்கான தயாரிப்பு திட்டமிடல் மாவட்டக்குழு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆல்துரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ். ஆர்.பத்ரி, மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் மற்றும் நீலகிரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, கே.ராஜன், எம்.ஏ.குஞ்சுமுகமது, எல்.சங்கரலிங்கம் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து தலைவர்கள் பேசுகையில், கட்சியின் ஊழியர்கள், ஆதரவாளர்கள், வர்க்க வெகுஜன சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் என ஆயிரம் உண்டியலை வழங்குவது. நாள் ஒன்றுக்கு அதில் பத்து ரூபாய் செலுத்துவதற்கான ஆர்வத்தை தூண்டுவது. பத்து உண்டியலுக்கு ஒரு மாவட்டக்குழு உறுப்பினர் மற்றும் ஒரு இடைக்குழு உறுப்பினர் பொறுப்பாக்கப்பட்டு தினம்தோறும் அவர் ஊக்கப்படுத்தும் பொறுப்பு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் ஆயிரம் உண்டியலை பெற்ற தோழர்களின் பெயர் பட்டியலை பராமரித்து கட்சியின் மாவட்ட மையமும் அவர்களை தொடர்பு கொண்டு பேசுவது என திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 1 ஆம்தேதி உண்டியல் வழங்கப்பட்டுள்ளது. ஆறுமாதம் கழித்து மே,1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று உண்டியலை திறப்பது. 180 நாட்களில் பத்து நாட்கள் கழித்து மீதம் 170 நாட்களில் 1700 ரூபாய் அந்த உண்டியலில் இருக்கும். இதில் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தாவாக 1500 ரூபாயும். மார்க்சிஸ்ட் தத்துவ இதழ், செம்மலர் இலக்கிய இதழுக்கான தொகையை உண்டியலில் உள்ள பணத்தை கொண்டு கட்சி உறுப்பினரின் கடமையை செய்வது என்கிற திட்டமிடலை செய்திருக்கிறார்கள். முன்னதாக மார்க்கிஸ்ட் கட்சியின் இடைக்குழு செயலாளர்களிடம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தீக்கதிர் சந்தா உண்டியலை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உண்டியலை குலுக்கி உழைப்பவன் உரிமைக்குப்போராடும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள். தனது வீட்டில் உண்டியலை வைத்து சொந்த காசை சேமித்து வர்க்க கடமையாற்ற முனைப்பு காட்டி வருவது முன் உதாரணமாக திகழ இருக்கிறது. வரும் மேநாளில் நீலகிரி மாவட்டக்குழு ஆயிரம் உண்டியல் தீக்கதிர் சந்தாவை ஒப்படைப்பார்கள். உதகை என்றால் உறை பனி குளிர் என்பதை தாண்டி உண்டியலும். தீக்கதிரும் இனி வரும் காலத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மத்தியில் பேசப்படு என்பது திண்ணம்.
அ.ர.பாபு.

Leave a Reply

You must be logged in to post a comment.