ஈரோடு: அம்பேத்கார் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தலித் அமைப்புகளின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கார் முழு உருவ சிலையை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் நிறுவ அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதனன்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தலித் அமைப்புகளின் சார்பில் உண்ணாவிரப் போராட்டம் நடைபெற்றது.

இதில், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், தீண்டாமை ஒழிப்பு முன்னையின் மாவட்ட செயலாளர் பி.பி.பழனிசாமி, ஜனநாயக மக்கள் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆறுமுக எ.சி.கண்ணன், மனித நேயம் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் எ.சித்திக், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலர் தா.சண்முகம் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள். இதில், திரளானோர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: