திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மர்மக்காய்ச்சலுக்கு இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரம் 15-வது வார்டு தும்மிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்ராம் பந்தல் தொழிலாளி. இவரது மனைவி காளிம்மாள்(வயது35). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றுள்ளனர். சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய காளியம்மாள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். தேவத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது ஒட்டன்சத்திரம் பகுதியில் மர்மக்காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை. இருப்பினும் அனைத்து மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: