புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கல்லூரி முதல்வர் சாரதா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டி விபரம்: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், பன்றிக்காய்ச்சலை உறுதி செய்வதற்கான கருவி தற்போது இல்லை. விரைவில் அந்தக் கருவி ஏற்படுத்தப்படும். அதுவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதிய மருத்துவர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஒப்புதல் கிடைத்ததும் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு செயல்படத் தொடங்கும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: