ஒளிரும் தியாக தீபங்கள் மார்க்சிஸ்ட் தீரர்கள் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான நாளிலிருந்து அதன் தோழர்கள் சுமார் 4000 பேர் உயிர்த்தியாகங்களைப் புரிந்துள்ளனர். அது, 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ம்தேதியன்று நாகை மாவட்டம் வெண்மணியில் ஆண்கள் – பெண்கள் – குழந்தைகளுமாக விவசாய தொழிலாளர்சங்கத்தைச் சேர்ந்த 44 பேர் நிலப் பிரபுத்துவ கொடிய வெறியர்களால் தீ வைத்து உயிருடன் கொளுத்தப்பட்ட வெண்மணியின் கண்மணிகளிலிருந்து தொடங்குகின்றது. இந்திய உழைப்பாளிகளின் இதயங்களை இன்றும் வேதனைப்படுத்தும் அணையா நெருப்பு அது.1971ஆம் ஆண்டில் மேற்குவங்க ஜனநாயக முன்னணி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு ஆளுநர் ஆட்சி தொடங்கியதிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் என்று அனைத்துப் பகுதியினர் மீதும் காங்கிரஸ் கட்சியினரும், குறிப்பாக “சத்ரபரிஷத்” என்ற மாணவர் அமைப்பினரும் நடத்திய கொலைவெறி ஆட்டத்தில்நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதுவும் 1972ம் ஆண்டில் நடைபெற்ற மோசடித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அங்கே ஆட்சியைப் பிடித்தப் பின் அரைப் பாசிச ஆட்சி தொடங்கி 1976ஆம் ஆண்டு வரை வெறியாட்டம் போட்டது. இக்காலக்கட்டத்தில் மட்டும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்த 1500 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர். வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த இளம் ஊழியர்கள் பலரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்று அவர்கள் வயிற்றை அறுத்து கங்கை ஆற்றில் வீசி கொன்ற கொடூர சம்பவங்கள் அங்கே நடைபெற்றன.

மத்தியில் ஜனதா கட்சி அரசாங்கம் அமைந்தபின் 1977ம் ஆண்டில் நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அது 32 ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. அதன் பின் ஆட்சியைப் பிடித்த திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் மார்க்சிஸ்ட்டுகள் மீது கொலைவெறியை கட்டவிழ்த்துவிட்டது. இந்த ஆட்சியிலும் மார்க்சிஸ்ட் கட்சி பல நூற்றுக்கணக்கான ஊழியர்களை இழந்துள்ளது. ஆக கடந்த 54 ஆண்டுகாலத்தில் மட்டும் மார்க்சிஸ்ட் கட்சி மேற்குவங்கத்தில் தனது அரிய கண்மணிகள் 3ஆயிரம் பேரை இழந்துள்ளது. கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் ஆகியவை பல நூற்றுக்கணக்கான ஊழியர்களை அரசியல் எதிரிகளின் குறிப்பாக பாஜக – ஆர்எஸ்எஸ் கொலைவெறித் தாக்குதலில்இழந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் பிரிவினைவாதத்தை எதிர்த்து அரசியல் ரீதியாகப் போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் 200க்கும்மேற்பட்டசெயல்வீரர்கள் காலிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆந்திராவில் உபரி நிலங்களை கைப்பற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவிவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த எட்டு பேர் கம்மம் மாவட்டம் முடிகொண்டா என்ற இடத்தில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தில்மட்டும் இக்காலக்கட்டத்தில் வெண்மணி தியாகிகள் நீங்கலாக, வீராங்கனை லீலாவதி உள்ளிட்டு 40 தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

திரிபுராவில் ஏராளமான மார்க்சிஸ்ட் தோழர்கள், திரிபுரா உப – ஜாதி சமிதி என்ற பிரிவினைவாதக் கும்பலால் கொல்லப்பட்டனர். பீகாரில், மார்க்சிஸ்ட் தலைவர் அஜித் சர்க்கார் சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1967 முதல் இன்றுவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுமார்4ஆயிரம் செயல்வீரர்களை இழந்துள்ளது. அவசர கால அடக்குமுறை1975 ஜூன் மாதம் 25ம் தேதியன்று நள்ளிரவில் இந்திரா காந்தி அரசாங்கம் அவசரநிலைப் பிரகடனம் செய்து நாடு முழுவதும் எதிர்க்கட்சியினரை கைது செய்து சிறையில் அடைத்தது. மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களான எம்.பசவபுன்னையா, மேஜர் ஜெய்பால்சிங், மோதிலால் சர்மா, ஜோதிர்மய் பாசு உள்ளிட்டு மார்க்சிஸ்ட் தோழர்கள் பலர் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறையில் அடைக்கப்பட்டனர். மத்தியப் பிரதேசம் நாக்தா சிறையில் அடைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் தலைவர் பைரவ் பாரதி சிறையிலேயே இறந்தார். நிருபன் சக்ரவர்த்தி, தசரத்தேவ் போன்ற திரிபுரா மார்க்சிஸ்ட்தலைவர்கள் 2 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அவ்வாண்டு டிசம்பர் 30ம்தேதியன்று திமுக அரசாங்கம் கவிழ்க்கப்பட்டவுடன், திமுக, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் காவலில் வைக்கப்பட்டனர்.

அரசியல் அரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் உருவாக்க நாளிலிருந்தே இந்திய அரசியல் அரங்கில் தன்பணியைத் தொடங்கிவிட்டது. மக்கள் – விரோத காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் நோக்குடன் அது 1967ஆம்ஆண்டு தேர்தலில் ஐக்கிய முன்னணியை சாத்தியமான மாநிலங்களில் உருவாக்கியது. தேர்தலுக்கு முன்பு கேரளாவில், பஞ்சாப்பில் அது உருவாக பாடுபட்டது. தேர்தலுக்குப் பின் மேற்குவங்கத்தில் வங்காள காங்கிரஸ் தலைமையில் ஐ.மு. உருவாக அது பாடுபட்டது. தமிழ்நாட்டில் திமுகவுடன் அது தொகுதி உடன்பாடு கண்டது. இத்தேர்தலில் காங்கிரஸ் எட்டுமாநிலங்களில் ஆட்சியை இழந்தது. மக்களவையில் அதன் பலம் குறைந்தது.
மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி 19 இடங்களைப் பெற்றது. அதே 1967ஆம் ஆண்டில் பம்பாயில் தென்னிந்தியர்கள் மீது குறிப்பாக தமிழர்கள் மீது சிவசேனை தாக்குதல் தொடுத்து அவர்கள் கடைகளை அடித்து நொறுக்கி விரட்டியபோது, மார்க்சிஸ்ட் கட்சி அதில் தலையிட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனை செய்யும் அட்டகாசத்தை அம்பலப்படுத்தியது. மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.

இந்தக் கொடிய தாக்குதலை அம்பலப்படுத்தியது. அதன் பின்னர்தான் இந்திரா காந்தி அரசாங்கம் அதில் தலையிட்டது. அதேபோன்று சண்டிகர் நகர்பஞ்சாப்புக்கு தரப்பட வேண்டும் என்று அகாலிதள தலைவர் சாந்த் பதேசிங்தீக்குளிக்கப்போவதாக அறிவித்தபோது பெரும் பதற்றம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் தலைவர்கள் சுர்ஜித்தும், பி.ராமமூர்த்தியும் அகாலிதள தலைவர்கள் மற்றும் பிரதமர் இந்திராகாந்தியுடன் தொடர்ந்து பல நாட்கள் விவாதித்து ஒரு தீர்வுகாண உதவினர்.அசாம் மாநிலத்தில் அசாம் கண தந்திர பரிஷத் என்ற அமைப்பு மகந்தாஎன்பவர் தலைமையில் அசாமியர் அல்லாதவர் மீது குறிப்பாக வங்கமொழி பேசும் மக்கள் மீது கொடூரத் தாக்குதல் தொடங்கிய போது மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பி. ராமமூர்த்தி அங்கே அனுப்பப்பட்டு அவர்நிலைமையைக் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டார். அதன் மீது மத்திய அர
சாங்கம் இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது. அவர் எழுதிய “அசாமின் நடப்பதென்ன?” என்ற பிரசுரம் பல மொழிகளில் வெளியானது. இதேபோன்று குஜராத் இடஒதுக்கீடுப் பிரச்சனை, காவேரி நதிநீர்ப் பிரச்சனை, கள்ளப்பணம் குறித்த வாஞ்சு குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்தது போன்ற பலவற்றில் மார்க்சிஸ்ட் கட்சி தலையீடு செய்தது.

இந்திரா காங்கிரசின் மேற்குவங்க அரைப்- பாசிச ஆட்சியையும்,அவசரகால நிலைமை அட்டூழியங்களையும் எதிர்த்த மார்க்சிஸ்ட் கட்சி 1977ம் ஆண்டு தேர்தலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் ஜனசங்கம், சோசலிஸ்ட்டுகள், காங்கிரஸ்காரர்களில் ஒருபகுதியினர் சேர்ந்து அமைத்த ஜனதா கட்சியுடன்தேர்தல் உடன்பாடு கண்டு மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஒரிசா மற்றும்
பஞ்சாப்பில் பல இடங்களில் வெற்றிபெற்றது. 1980ஆம் ஆண்டுகளிலும் 1990ஆம் ஆண்டுகளிலும் காங்கிரஸ் கட்சி மக்களவையில் பெரும்பான்மையை இழந்த நிலையில், மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்டு மாற்று அரசாங்கங்களை உருவாக்குவதில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னின்றது. இவ்வாறுதான் வி.பி.சிங், அதன்பின் தேவகௌடா, இறுதியாக ஐ.கே.குஜ்ரால் தலைமையில் மாற்று அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டன. 2004ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுக்கு, பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற முடிவில் மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் 60 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், அது காங்கிரசுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளித்தது. தனது 4வது ஆண்டில்அந்த அரசு அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தபோது இடதுசாரிக் கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களின் மாநாடு இருமுறை நடைபெற்றது. ஒருமுறை ஸ்ரீநகரிலும், மறுமுறை கொல்கத்தாவிலும் நடைபெற்றது.

உலக கம்யூனிஸ்ட் ஒற்றுமைக்கு வழிவகுத்த மார்க்சிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அது உருவான நாள் முதலே உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே ஒற்றுமைக்காக இடைவிடாது பாடுபட்டு வருகிறது. அதுவும் சோவியத் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே 1961ஆம் ஆண்டிலிருந்து எழுந்த தத்துவார்த்த மோதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய – லெனினிய அடிப்படையில் உறுதியாக நின்று தன் கருத்தை வெளிப்படுத்தியது. அதனுடைய தத்துவார்த்த நிலைபாடு 1967ஆம்ஆண்டின் பிற்பகுதியில் மதுரையில் நடைபெற்றஅதன் மத்தியக்குழு கூட்டத்தில் இறுதியாக்கப்பட்டது. அது 1960ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற 81 உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட உலகின் நான்கு பிரதான முரண்பாடுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஆவணம் கட்சி அணிகளின் கருத்துக்கு விடப்பட்டு 1968ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் பர்துவான் நகரில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் (பிளீனத்தில்) இறுதியாக்கப்பட்டது. அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாடாக இன்றளவும் தொடர்கிறது. 1990ம் ஆண்டில் சோவியத் நாடு சிதறுண்ட நிலையில், சோசலிச சக்திகளுக்கு ஒரு பெரும்பின்னடைவு ஏற்பட்டது. இது உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் பாதித்தது. உலகின் பிரபலமான கம்யூனிஸ்ட் கட்சிகளுள் ஒன்றான இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி தன் பெயரைக் கூட மாற்றிக் கொண்டது. இந்த சோவியத் பின்னடைவைக் கண்டு ஏகாதிபத்திய சக்திகளும் பிற்போக்காளர்களும் மகிழ்ச்சிக்கூத்தாடினர்.

மார்க்சியத்திற்கும் மார்க்சுக்கும் இரங்கற்பா எழுதினர். மார்க்ஸ் தன் கல்லறையில் புரண்டு படுக்கிறார் என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஏடு எழுதியது. உலகெங்கிலும் உள்ள முற்போக்காளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவான தொய்வான நிலையைக் கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதற்காக பெரும் முன்முயற்சி எடுத்தது. அதன்படி 1993ம் ஆண்டு மே மாதத்தில் அது கொல்கத்தாவில் பல நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்ற ஒரு மாநாட்டைக் கூட்டியது. ‘நடப்பு உலக நிலைமை – மார்க்சியத்தின் செல்லுபடியாகும் தன்மை’ என்ற தலைப்பில் காரல்மார்க்சின் 175வது பிறந்தநாளையொட்டி ஒரு கருத்தரங்கை நடத்தியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு 21 நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் பங்கேற்றன. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும்,சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தன. இதைத்தொடர்ந்து 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட்கட்சியும் சேர்ந்து தில்லியில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மாநாட்டை வெற்றிகரமாக நடத்தின.

ஏராளமான கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இதில்பங்கேற்றன. இந்த மாநாடு நிறைவாக ஒரு பிரகடனம் செய்தது: “மனிதகுலத்தின் முன்புள்ள ஒரே அரசியல் மாற்று சோசலிசம்தான்… மனித துன்ப துயரங்களுக்கும் சுரண்டலுக்கும் ஒரே விடை சோசலிசம்தான்.” இந்த மாநாட்டைத் தொடர்ந்த இத்தகைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாட்டு தலைநகரங்களில் நடைபெற்றுள்ளன. கடைசியாக துருக்கியில் நடைபெற்ற 17வது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி பங்கேற்றார். 1993ல் மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றிவைத்த உலக கம்யூனிஸ்ட் அணையா தீபம் இன்று உலகெங்கும்சுடர்விட்டு பிரகாசிக்கிறது. இதன் ஒவ்வொரு மாநாடும் உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சுரண்டும்சக்திகளுக்கு எதிராக, போர்வெறியர்களுக்கு எதிராகபிரகடனம் செய்து வருகிறது. தொழிலாளி வர்க்கத்தின்ஒற்றுமைக்காக, வெற்றிக்காக குரல் எழுப்பி வருகிறது. இந்திய நாடு இன்று இருபெரும் அபாயங்களைசந்தித்து வருகிறது. ஒருபுறம் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்ற ஏகாதிபத்தியத்தின், நிதி மூலதனத்தின் தாக்குதல்கள், நாசகரப் பொருளாதார கொள்கைகள், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கும், கொள்ளைக்கும் இந்தியநாட்டின் தொழில்துறையை திறந்துவிட்டு தொழிலாளரை கொடிய சுரண்டலுக்கு ஆளாக்குவது மறுபுறம்இத்தகைய நாசகரப் பொருளாதார கொள்கைகளைப் பின்பற்றும் அதே சமயத்திலேயே மதவெறிகொண்ட இந்துத்துவா கொள்கையைப் புகுத்திநாட்டை மத அடிப்படையில் சீரழிக்க நினைக்கும் பாஜகவின் மத்திய அரசாங்கம் மற்றும் சாதியவாதம், வகுப்புவாதம், கலாச்சார சீரழிவு போன்றவற்றையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.