மக்கள் ஜனநாயகப் புரட்சி எனும் மகத்தான லட்சியத்துடன், 1964 அக்டோபர் 31 அன்று, கல்கத்தாவில் தியாகராஜர் அரங்கில் துவங்கிய 7வது அகில இந்திய மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எனும் மாபெரும் புரட்சிக் கட்சி உதயமானது.

55 ஆண்டு காலமாக இந்திய அரசியல் வானில், உழைக்கும் வர்க்க மக்களின் உன்னத இயக்கமாக பீடுநடை போட்டு வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).
கல்கத்தா மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (நிற்பவர்கள் இடமிருந்து) பி.ராமமூர்த்தி, எம்.பசவபுன்னையா, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், (அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து) புரமோத் தாஸ் குப்தா, ஜோதிபாசு, பி.சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஏ.கே.கோபாலன் ஆகியோர்.

இந்த மாபெரும் இயக்கத்தின் முதல் அரசியல் தலைமைக்குழு, இந்திய அரசியல் தலைவர்களிலேயே அப்பழுக்கற்ற, அறிவுக்கூர்மைமிக்க மகத்தான தலைவர்கள் ஆவர். கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் தோழர்கள் என்.சங்கரய்யா, வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோர் இன்றும் நம்மோடு இருந்து வழிகாட்டுகிறார்கள். இந்த தலைவர்கள் காட்டிய பாதையில் செம்பதாகையை உயர்த்திப் பிடித்து, லட்சோப லட்சம் தோழர்களின் உறுதிமிக்க படையினை நடத்தி, இந்தியாவில் சோசலிச சமூகத்தை படைக்கும் மாபெரும் பயணத்தை கம்பீரத்துடன் தொடர்வோம்.

Leave A Reply

%d bloggers like this: