நாமக்கல் : கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் நிர்ணயம் செய்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல்லில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் நிர்ணயம் செய்து உத்தரவிட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு உயர்வில் ஒஎச்டி ஆபரேட்டர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய சம்பளம் நிர்ணயம் செய்து வழங்கியதில் உள்ள முரண்பாடுகளை களைந்திட வேண்டும். ஓய்வுபெறும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படி பணிக்கொடை ரூ 50 ஆயிரமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும். கிராமப்புற பஞ்சாயத்துகளின் பணிபுரியும் அனைவருக்கும் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்ஜி.ராஜகோபால் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழி
யர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கு.ராஜேந்திரபிரசாத் துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே.கந்தசாமி, மாவட்ட செயலாளர் கே.கண்ணன். மாவட்ட பொருளாளர் முருகேசன். மாவட்ட உதவிச் செயலாளர் கு.சிவராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். முடிவில், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.