திண்டுக்கல், அக்.29
காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் பிரஸ்கிளப் முன்பிருந்து மறியல் ஊர்வலம் புறப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர். சிலை முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான், மாவட்டத்தலைவர் பி.எம்.இராமு, மாவட்ட நிர்வாகிகள் பெருமாள், மணிக்காளை, சுப்புலட்சுமி, வனிதா, அப்துல்ரகுமான், இளங்கோ,ஜோதியம்மாள், பாப்பாத்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெசி, மாவட்டப் பொருளாளர் ராசு ஆகியோர் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்கத்தின்; மாவட்டத்தலைவர் ஜே.எஸ்.விஜயகுமார், மாவட்டச் செயலாளர் முபாரக்அலி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மறியலில் 800க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.