கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியை அமைத்திட வேண்டும் என வாலிபர் சங்க மாவட்டமாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தின் நீலகிரி மாவட்ட மாநாடு கூடலூர் விடிஆர் நினைவரங்கத்தில் (ஜானகியம்மாள் திருமண மண்டபம்) நடைபெற்றது. இம்மாநாட்டை சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன் துவக்கி வைத்து உரையாற்றினார். இம்மாநாட்டில், நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியை அமைத்திட வேண்டும்.

விவசாயத்தை நம்பி வாழும் நீலகிரி மாவட்ட மக்களை பாதுகாக்கும் வகையில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக எம்.ரஞ்சித், செயலாளராக சி.மணிகண்டன், பொருளாளராக சி.வினோத், துணை தலைவராக எம்.கே. பாபு, பி.கே. ராஜேஷ், துணை செயலாளராக பி.பி சஜீர், பிரபாகரன் மற்றும் புதிய மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. முடிவில், மாநில துணை செயலாளர் மணிகண்டன் நிறைவுரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.