நாமக்கல்: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக கடைசி மாத ஊதியத்தில் 50 சதவிகிதத்தை ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் பணிக்கொடை வழங்கிட வேண்டும். பாரபட்சமான போக்கை கைவிட்டுவிட்டு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதமாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நாமக்கல்லில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து பேரணி புறப்பட்டு பூங்கா சாலை வழியாக வந்தடைந்து. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணகி தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.ஜெயக்கொடி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கு.ராஜேந்திரபிரசாத், மாவட்டசெயலாளர் ஆர்.முருகேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.