திண்டுக்கல்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் வடமதுரை ஒன்றியச் செயலாளர் பாலாமணி ஞாயிறன்று நடைபெற்ற விபத்தில் காலமானார். வேலைநிறுத்தம் மற்றும் மறியலை முன்னிட்டு ஊழியர்களை சந்தித்து வந்த போது வடமதுரை அருகே நடந்த விபத்தில் காலமானார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் சேர்க்கப்பட்டது. அவரது மறைவு செய்தியறிந்து அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முபாரக்அலி, மாவட்டத்தலைவர் விஜயகுமார், சத்துணவு சங்க மாவட்டத்தலைவர் பி.எம்.ராமு உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். திங்களன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் தலைமையில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒரு நிமிடம் பாலாமணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

(நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.