மன்னார்குடி

அக்.29

இந்திய அரசின் அறிவியல் தொழிற்நுட்ப கழகமும் தேசிய அறிவியல் பரிமாற்றக் குழுமமும் இணைந்து ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகின்றன. 2018ஆம் ஆண்டிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்டக்குழுவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டதலைவர்    த.பெருமாள்ராஜ், ஒன்றிய தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் பொ.நித்தையன், ஜேஆர்சி ஒருங்கிணைப்பாளர் சித.க.செல்வசிதம்பரம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் யு.எஸ்.பொன்முடி அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர் டி.சாந்தி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வா.சுரேஷ் அறிக்கை வைத்தார். இந்த மாநாட்டில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.  கோட்டூர் ஒன்றியம் செருவாமணி அரசினர் மேனிலை பள்ளி, மன்னார்குடி தேசிய மேனிலை பள்ளி  திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேனிலை பள்ளி முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேனிலை பள்ளி  முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சிஒன்றிய நடுநிலை பள்ளி மன்னார்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேனிலை பள்ளி மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரிக் மேனிலை பள்ளிளின் ஆய்வறிக்கைகள் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன. இந்த மாணவர்கள் எதிர்வரும் 9.11.2018 லிருந்து 11.11.2018 மூன்று நாட்கள் கோவையில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப. குமார், சு. சதாம்உசேன், கரு.செல்வராஜ், எம். பாலகிருஷ்ணன், எம். தமிழரசி,  தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் சி. செல்லதுரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.ஏ.எஸ்.எம் சுல்த்தான் இப்ராஹீம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள்  வாழ்த்தி பேசினார்கள். திருவாரூர் மாவட்ட மாநாட்டில் பள்ளி்கல்வித்துறை சார்பாக முத்துப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் என். சொக்கலிங்கம், பி.முருகபாஸ்கரன், வட்டார மைய மேற்பார்வையாளர் ஆர்.வி.முத்தண்ணா, ஆகியோர் ஆய்வு மாணவர்களுக்கு பரிசித்து பாராட்டி பேசினார்கள். . முடிவில் மாவட்ட பொருளாளர் இரா. சிவக்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.